Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹங்கேரியில் இருந்து இரண்டாவது போர் விமானம்! – 220 இந்தியர்கள் மீட்பு!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (09:05 IST)
உக்ரைனிலிருந்து வெளியேறிய இந்தியர்கள் 220 பேர் இந்திய போர் விமானம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்திய மக்கள் அண்டை நாடுகள் வழியாக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் விமானம் வழியாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இந்த மீட்பு பணிகளில் தற்போது இந்திய விமானப்படையின் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது உக்ரைனில் இருந்து தப்பி ஹங்கேரி சென்ற 220 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட சி17 ரக போர் விமானம் இன்று அதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments