Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க ரோடு போடுங்க.. எவன் குறுக்க வரான்னு பாப்போம்! – தயார் நிலையில் இந்தியா!

Webdunia
புதன், 27 மே 2020 (08:42 IST)
லடாக் எல்லையில் சீனா – இந்தியா இடையே போர் மூளும் சூழல் உள்ள நிலையில் எல்லையில் சாலை பணிகளை தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா – சீனா எல்லைப்பகுதிகளான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மீது அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது சீனா. கடந்த ஆண்டு லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கிழக்கு லடாக்கின் பங்காங் சோ ஏரிப்பகுதி அருகே இந்தியா முக்கியமான சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கிலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், கடந்த 5ம் தேதி சீனா இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் சண்டை மூண்டது. எல்லைப்பகுதியில் கற்களை வீசி அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் 9ம் தேதி சிக்கிம் பகுதியிலும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. அதை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் தங்கள் இராணுவ பலத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு காரணமான சாலை பணிகளை முழுவதுமாக முடிக்காமல் விடுவதில்லை என இந்தியா தீர்க்கமாக இருக்கிறது. லடாக், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் நடைபெறும் கட்டமைப்பு பணிகளில் எந்த தொய்வும் இன்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக அரசு வட்டாரங்களில் பேசி கொள்ளப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments