Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவுக்கு மருந்து தர இந்தியா ஒப்புதல்! – ட்ரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து நடவடிக்கை!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (10:43 IST)
அமெரிக்காவுக்கு மருந்து கேட்டு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மருந்துகளை அனுப்ப இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மேல் அதிகரித்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலகளவில் அதிகளவில் ஹைட்ராக்ஸிக்ளொரோகுயின் தயாரிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மருந்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் இந்தியாவின் சூழலை கருத்தில் கொண்டு மலேரியா மருந்துகள் உள்ளிட்ட சிலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எச்சரித்துள்ள ட்ரம்ப் ”இந்தியா எங்களது நட்பு நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டும் அதற்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியா மருந்து கொடுக்காதபட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.

அவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிக்ளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கா மட்டுமல்லாமல் அவசர நிலையில் இருக்கும் மற்ற நாருகளுக்கும் மருந்துகளை அனுப்ப இந்தியா அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை ”மனிதாபிமான அடிப்படையில் ஹைராக்ஸிக்ளோரோகுயின் மற்றும் பாரசிட்டமல் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்து விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments