Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்ட டிரம்ப் !!

Advertiesment
கொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்ட டிரம்ப் !!
, ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (10:14 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருவது என்பது தெரிந்ததே. இன்று ஒரே நாளில் 600-க்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய அரசும் மாநில அரசுகளும் தீவிரமான முயற்சிகளை அவ்வப்போது எடுத்து வருகின்றனர் என்பதும், ஊரடங்கு உத்தரவை சரியாக பின்பற்றுதல், சமூக விலகலை பின்பற்றுதல் ஆகியவற்றைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று மாலை,  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சற்று முன்னர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து தொலைபேசியில் பேசியுள்ளார். அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதாக தெரிகிறது. மேலும் கொரோனாவை ஒழிக்க இருநாடுகளும் முழுபலத்தையும் காட்ட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடி தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வாஷிங்டனில் பேசிய டிரம்ப் கூறியதாவது : இந்தியப் பிரதமர் மோடியிடம்  தொலைபேசியில்  பேசினேன். கொரோனா சிகிச்சைகான ஹைட்ரோகிளோரின் மருந்த நம் நாட்டுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் அதிகரித்திருக்கும் சுபசுர குடிநீர் – போலி மருந்துகள் விற்பனை அமோகம் !