காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ராகுல்காந்தி, சோனியா காந்தியை தாக்கி பேசுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதிலிருந்து பிரதமர் மோடி குறித்து நல்ல விதமாக பேசி வரும் குலாம் நபி ஆசாத், தொடர்ந்து சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சித்தும் வருகிறார்.
இந்நிலையில் தான் இவ்வாறாக விமர்சிப்பது குறித்து விளக்கமளித்து பேசியுள்ள குலாம் நபி ஆசாத் “சோனியாகாந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக ஏன் பேசுகிறீர்கள் என சிலர் கேட்கிறார்கள். கட்சியிலிருந்து விலகியபோது சோனியா காந்திக்கு கடிதம் எழுதிவிட்டு 3 நாட்கள் காத்திருந்தேன். நான் அவர்கள் பற்றி எதுவுமே பேசவில்லை. மாறாக அவர்கள் என்மீது ஏவுகணைகளை வீசினார்கள்.
அவர்கள் தாக்கும்போது நான் சும்மா இருக்க முடியாது. அவை சுட்டு அழிக்கப்பட்டன. பதிலுக்கு நான் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருந்தால் அவர்கள் காணாமல் போயிருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.