பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதை அனுமதிக்கும் திமுக அரசு ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அனுமதிக்காதது ஏன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்
மோடிக்கு கருப்புக்கொடி காட்ட திமுக அரசாங்கம் இடம் ஒதுக்கி தருகிறது. ஆனால் நாங்கள் ஜனநாயக முறைப்படி ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தால் எங்களை கைது செய்துள்ளது. இந்த விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.
காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள் சிறுபான்மையினராகவும் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராகவும் உள்ளனர். தேசியவாதிகள் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பிரித்தது காங்கிரஸ் கட்சி தான். இது இந்திய காங்கிரஸ் அல்ல; இத்தாலி காங்கிரஸ். கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியோடு இந்த பயணம் நடைபெற்று வருகிறது என் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.