Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்தில் பாஜகவை முந்தியது காங்கிரஸ்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (09:21 IST)
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது. குஜராத்தில் பாஜகவை முந்திய காங்கிரஸ் முதல் இடத்தை வகிக்கிறது
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேத்தில், நடைபெற்றத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
 
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 85 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் முதல் இடத்திலும், 80 இடங்களைப் பிடித்து பாஜக இரண்டாவது இடத்திலும் உள்ளது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 25 இடங்களைப் பிடித்து முதல் இடத்திலும், காங்கிரஸ்  18 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!

அயோத்தி ராமருக்கு உயிர் ஊட்டிய தலைமை அர்ச்சகர் மரணம்.. கருவறையில் காட்டிய அறிகுறி

வடமாநிலத்திற்கு தப்பிச் சென்றுவிட்டாரா முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சிபிசிஐடி விரைவு

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments