குஜராத், இமாச்சலில் பாஜக முன்னிலை

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (09:03 IST)
குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்பொழுது எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக முன்னிலை வகிக்கிறது
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேத்தில், நடைபெற்றத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.  
 
இந்த வாக்குகளை எண்ணும் பணி தற்போழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 78 இடங்களைப் பிடித்து பாஜக முதல் இடத்திலும், 74 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 21 இடங்களைப் பிடித்து முதல் இடத்திலும், காங்கிரஸ்  11 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments