Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குஜராத், ஹிமாச்சலபிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: வெற்றி யாருக்கு?

குஜராத், ஹிமாச்சலபிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: வெற்றி யாருக்கு?
, திங்கள், 18 டிசம்பர் 2017 (07:35 IST)
குஜராத் மற்றும் ஹிமாச்சலபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகவுள்ளன.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன. இம்மாதம் 9ம் தேதி நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 14ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 68.41 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. . 
 
68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சலப் பிரதேத்தில், நடைபெற்றத் தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகின.  இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8  மணிக்குத் தொடங்குகிறது.
 
இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்பது நண்பகலுக்குள் தெரிய வரும்.
webdunia

குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கணவரை கொலை செய்தது யார்? தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்: பெரியபாண்டியன் மனைவி