Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 ஆம் கட்ட அறிவிப்புகள்: விவரிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன்!

Advertiesment
4 ஆம் கட்ட அறிவிப்புகள்: விவரிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன்!
, சனி, 16 மே 2020 (16:17 IST)
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 
 
ஏற்கனவே வருமான வரிக்கணக்கல் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது, சிறுகுறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி
 
அணுசக்தித்துறையில் தனியாருக்கு அனுமதி

செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டம்
 
சமூக கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தனியார் துறைகளை அனுமதிப்பதன் மூலம் ரூ.8100 கோடி நிதி திரட்டப்படும்
 
மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி
 
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன

புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும்
 
இதன்மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும்
 
மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்
 
மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும்
 
விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தபப்டும்

இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாக திருத்தங்கள் கொண்டுவரப்படும்
 
வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்
 
இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
 
கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும்
 
ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும்
 
பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% வரை அதிகரிப்பு

வளர்ந்து வரும் புதிய துறைகளை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் அறிமுகம்
 
முக்கியமான 8 துறைகளுக்கு இன்று அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது
 
கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாகின்றன
 
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை
 
நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்
 
நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம்
 
நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை

பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்
 
தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின அடிப்படை
 
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை
 
நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான், நெட்ஃபிளிக்ஸை ஊதி தள்ளிய Zee 5!!