Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Live Update: ரூ.20 லட்சம் கோடி யார் யாருக்கு..? திட்டங்கள் என்னென்ன..?

Live Update: ரூ.20 லட்சம் கோடி யார் யாருக்கு..? திட்டங்கள் என்னென்ன..?
, புதன், 13 மே 2020 (16:21 IST)
பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

 
 
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை பிரதமர் மோடி மக்களுடன் 5 முறை உரையாற்றியுள்ளார். அதன்படி தனது நேற்றைய 5வது உரையில் 17 ஆம் தேதிக்குப் பிறகான 4 ஆம் கட்ட ஊரடங்கு பற்றியும், ரூ.20 லட்சம் கோடிக்கு நாட்டில் பொருளாதார சிறப்புத் திட்டங்கள் குறித்தும் தகவல் வெளியிட்டார்.  
 
இந்நிலையில், பிரதமர் மோடி கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அவர் கூறியதாவது... 

டிடிஎஸ் வரிவிகிதம் 25% குறைப்பு, டிடிஎஸ் பிடித்தம் வரி விகிதம் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது

வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் மாதம் வரை நீட்டிப்பு  
 
கொரோனா நிகழ்வை கடவுளின் செயலாக கருதி, ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும்
 
கடந்த மார்ச் 25க்குள் கட்டுமானத்தை முடித்து, நிறைவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு அவகாசம்
 
மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும்
 
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும்

அடுத்த 45 நாட்களுக்கு, சிறு, குறு, நடுத்தர நிறுவன உற்பத்தி பொருட்கள் இ-மார்க்கெட் மூலம் விற்க வசதி ஏற்படுத்தப்படும்
 
வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும்
 
வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக ரூ.50,000 கோடி வழங்கப்படும்
 
ரூ.200 கோடிக்கு குறைவான அரசு டெண்டர்கள் இனி சர்வதேச அளவில் வெளியிடப்படாது

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அரசு செலுத்தும்
 
வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும் 
 
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வரையறைபடுத்துவதற்கான முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைப்பு
 
குறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
 
நடுத்தர தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது 
 
ரூ.20 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் நடுத்தர தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்
 
சிறு தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து, ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது
 
ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் சிறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும்
 
ரூ.10 கோடிக்கும் குறைவான முதலீடு இருந்தால், அந்நிறுவனம் குறு தொழில் நிறுவனமாக வரையறுக்கப்படும் 

"நிதிக்குள், நிதி" திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி மூலதன நிதி வழங்கப்படும்
 
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம்
 
வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன் வழங்க அரசே உத்தரவாதம் தரும்
 
அடமானம் இல்லாமல் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு கடன்

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு சேர வேணடிய ரூ.18,000 கோடி தொகை உடனடியாக விடுவிக்கப்பட்டது
 
ரூ.100 கோடி வரை விற்று முதல் காணும் நிறுவனக்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தால் பயன்பெறும்
 
ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் வருகிற அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை செயல்படுத்தப்படும்
 
நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி துணைக்கடன் வழங்கப்படும்

பிபிஇ கிட்டுகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தியில் வேகம் அதிகரித்துள்ளது’
 
ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி
 
நெடுஞ்சாலைத்துறை, விமான போக்குவரத்துத்துறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் 
 
மின்சாரத்துறை சீர்திருத்தங்களால் மின்மகை நாடாக இந்தியா மாறும் நிலை உருவாகியுள்ளது
 
பொது முடக்கத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள், ஏழைகள் பாதிக்கப்பட்டிருப்பதை அரசு உணர்ந்துள்ளது
 
41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளன
 
6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது-மத்திய நிதியமைச்சர்
 
சிறு, குறு தொழில்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி, இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்
 
சிறு, குறு தொழில்துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன
சுயசார்பு பாரதத்தை உருவாக்குவதே பிரதமர் மோடியின் நோக்கம்
 
ஆத்மநிர்ப பாரத் என்பது சுயசார்பு பாரதம் என்று பொருள்படும் 
 
சுய சார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் 
 
உள்ளூர் நிறுவனங்களை, உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம்
 
5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் மது கேட்டு வழக்கு – 20,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!