Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் எதிரொலி: பிளிப்கார்ட், அமேசான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (08:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் அத்தியாவசிய தேவைகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது என்பதும் மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
தியேட்டர்கள், மால்கள், கல்வி நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் எதிரொலியாக அதிரடியாக ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
 
இதன்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் விற்பனைத்தளமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த ஆர்டர்களும் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பெறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அமேசான் நிறுவனம் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை மட்டும் ஆர்டர் பெற்று டெலிவரி செய்யப்படும் என்றும் மற்ற பொருள்களின் ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments