உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் இருந்து அதன் நிறுவனர் பில்கேட்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டை கடந்த 1975 ஆம் ஆண்டு தனது நண்பர் பவுல் ஜிஆலனோடு இணைந்து தொடங்கினார் பில்கேட்ஸ். இதன் பங்குகளை வைத்திருந்தது மூலம் பில்கேட்ஸ் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிய பில்கேட்ஸ் இயக்குனர்கள் குழுவிலும் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியில் மட்டும் இருந்து வந்தார்.இந்நிலையில் இப்போது இயக்குனர்கள் குழுவில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ஆலோசகராக மட்டுமே தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
இதனை மைக்ரோ சாப்ட் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.