Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலனிடம் பேசிக்கொண்டிருந்த மகள் : கோடாரியால் அடித்துக்கொன்ற தந்தை

காதலனிடம் பேசிக்கொண்டிருந்த மகள் : கோடாரியால் அடித்துக்கொன்ற தந்தை
, திங்கள், 2 ஜூலை 2018 (15:47 IST)
புதிதாக வாங்கித்தந்த செல்போனில் காதலனிடம் பேசிக்கொண்டிருந்த தனது மகளை தந்தை கோடாரியால் அடித்துக்கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

 
ஆந்திர பிரதேசம் தோட்டரவுலபாடு கிராமத்தில் வசிக்கும் கோட்டையா என்பவரின் மகள் சந்திரிக்கா. இவர் அந்த பகுதியில் உள்ள 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தன்னுடன் படிக்கும் ஒரு மாணவரோடு காதல் ஏற்பட்டது.
 
எனவே, அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த மாணவி கூறி வந்துள்ளார். ஆனால், இது நமது குடும்பத்திற்கு ஒத்து வராது எனவே காதலை கைவிடு என சந்திரிக்காவின் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்துள்ளனர். ஆனாலும், அவர் தனது காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிக்கா தனது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். அப்போது, சந்திரிக்காவிற்கு அவரது தந்தை புதிய செல்போனை பரிசளித்துள்ளார்.
 
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை சந்திரிக்கா தனது செல்போனில் தனது காதலனுடம் பேசிக்கொண்டிருந்தார். இதுபற்றி அவரின் தந்தை கேட்ட போது, நான் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என வீம்பாக பேச, கோபமடைந்த அவரின் தந்தை கோடாரி கைப்பிடியால் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சந்திரிக்கா அங்கேயே மரணமடைந்தார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரிக்காவின் தந்தையை கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரானை தனிமைப்படுத்த சவுதியுடன் கூட்டு: சாமர்த்தியமாய் காய் நகர்த்தும் டிரம்ப்!