பாஜக மாணவர் அணியான ஏபிவிபி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான சரியான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்ல பாஜக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி அமைப்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து அப்புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது.
அந்த புகைப்படத்தை எடுத்த தனியார் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் அன்செல்லா ஜமிந்தர், “ஏபிவிபி மாணவ அணியினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இதை எடுத்தேன். ஆனால் தற்சமயம் இது மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது என ஜமிந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இது போலியான செய்தி என தெரியவந்துள்ளது.