"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

Siva
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (16:49 IST)
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான உத்தரவுகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் எந்த கோப்புகளும் இல்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சமூக ஆர்வலர் பரத்வாஜின் ஆர்டிஐ கேள்விக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பதிலளித்துள்ளது.
 
நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது?" என்பதுதான்  சமூக ஆர்வலர் பரத்வாஜ் தேர்தல் ஆணையத்திடம் எழுப்பிய கேள்வி. இதற்கு, தொடர் கோப்புகள் எதுவும் இல்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
 
"சுயாதீன மதிப்பீட்டின்" அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் முன்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாலும், அது குறித்த எந்த ஒரு பதிவும் இல்லை என்று தற்போது பதிலளித்துள்ளது.
 
மேலும், 2003-ஆம் ஆண்டு நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களின் நகலை கேட்டு, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உத்தரவையும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments