Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவனுடன் காதல்.. கர்ப்பமான நர்ஸிங் மாணவி.. கர்ப்பத்தை கலைத்ததால் பரிதாப பலி..!

Advertiesment
Tiruvallur

Mahendran

, வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (13:57 IST)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிக்கு அருகில் உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண், தனது உறவுக்கார சிறுவன் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஐந்து மாத கர்ப்பமடைந்துள்ளார். இந்த கர்ப்பத்தை சட்டவிரோதமாக கலைத்ததால், அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கொடிவலசாவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகள் டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு உறவினர் சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அந்த இளம்பெண் ஐந்து மாத கர்ப்பமடைந்துள்ளார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தை பெற்றோரிடம் மறைத்துள்ளார்.
 
கர்ப்பம் உறுதியானதை அறிந்த பெற்றோர், அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள ஒரு கிளினிக்கிற்கு அவரை அழைத்து சென்று, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர்.
 
கருக்கலைப்புக்கு பிறகு, இளம்பெண்ணின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால், அவரை முதலில் திருத்தணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
இதுகுறித்து, திருத்தணி மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கருக்கலைப்புக்கு உதவிய நர்ஸ் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், அந்த மாணவியுடன் பழகிய உறவினர் சிறுவனிடமும் விசாரணை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக மாறும் இந்தியா! - அமெரிக்கா வயித்தெரிச்சலுக்கு இதுதான் காரணமா?