Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரமா? தேர்தல் ஆணையம் தகவல்

Webdunia
புதன், 29 மார்ச் 2023 (18:23 IST)
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அங்கீகாரம் அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத வாக்குகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ள நிலையில் இது குறித்து பரிசீலனை நடந்து வருவதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
வரும் ஆண்டுகளில்  ஆம் ஆத்மி  கட்சி நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதால் தேசிய கட்சி அங்கீகாரம் பெற முயற்சி செய்து வருகிறது.
 
ற்கனவே காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தேசிய கட்சிகளாக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments