இந்த ஆண்டு கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இன்று தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது. அதேபோல் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தற்போதைய பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு பிரச்சார களத்தில் குதித்து உள்ளது என்பதும் இந்த இரு அணிகளுக்கு இடையே தான் மிகப்பெரிய போட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி வெளியானவுடன் இரு கூட்டணிகளும் தீவிரமாக தேர்தல் பணியை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.