Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பெண் சாமியார்

Webdunia
ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (16:24 IST)
சமீபத்தில் மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்தின் போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய பெண் சாமியார் சாத்வி பிரக்யா, அதன் பின் எழுந்த கடும் கண்டனங்களை தொடர்ந்து வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுவதாக சாத்வி பிரக்யா பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாத்வி பிரக்யா, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, 'பாபர் மசூதியை இடித்ததற்காக ஏன் வருத்தப்பட வேண்டும். உண்மையில் அதை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார். வீணான ஒன்று என்பதால் தான் பாபர் மசூதியை அப்புறப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
 
சாத்வி பிரக்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் இதுகுறித்து சாத்வி பிரக்யா தகுந்த விளக்கமளிக்க வேண்டும் என்று அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments