Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி

Advertiesment
அபிநந்தன் குறித்து சர்ச்சை கருத்து: சிக்கலில் சிக்கிய கஸ்தூரி
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (07:46 IST)
பாகிஸ்தான் பிடியில் இருக்கும் அபிநந்தன் குறித்து கருத்தை  கஸ்தூரி பதிவிட்ட கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமான படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் கஸ்தூரி தனது டிவிட்டரில் அபிநந்தன், சென்னையின் மகன். திருபணமூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும் பரம் விஷிஸ்ட சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு நபர் ஒருவர் சீருடையில் ஆச்சாரமா..? அந்த உயர்சாதி மனசு மானுடமாக மறுக்கிறதே என கூறினார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி மனுஷத்தன்மையே இல்லாமல் ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும் என பதிவிட்டு அவருக்கு பதிலடி கொடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் மகனை எதிர்க்கும் குஷ்பு? ஸ்டார் தொகுதியாகும் விருதுநகர்!