ஊரடங்கால் சுத்தமாகியது கங்கை
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசால் உயிரிழப்புகள், பொருளாதாரச் சீரழிவு உள்பட பல்வேறு விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் கொரோனா வைரசால் ஒரு சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
குறிப்பாக கொரோனா வைரசால் குற்றங்கள் பெரும்பாலும் குறைந்துள்ளதாலகவும், கடந்த சில நாட்களாக கள்ளக்காதல் கொலை கொள்ளை என எந்த செய்தியும் ஊடகங்களில் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றங்கள் செய்பவர்கள் கூட வெளியே சென்றால் கொரோனா வந்து விடும் என்ற அச்சத்தில் வீட்டில் இருக்கின்றார்கள் என்பது தான் இதற்கு காரணம்
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற் சாலைகளும் மூடப்பட்டு விட்டதால் காற்று மாசுபாடு பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி கங்கை நீர் குளிப்பதற்கு கூட தகுதி இல்லாத நீராக இருந்ததாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தற்போது கங்கைநீர் எதிர்பார்த்ததைவிட அதிகமாக சுத்தமாகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் அதில் உள்ள கழிவு நீர்கள் தற்போது கங்கை நீர் கங்கை ஆற்றில் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் அதனால் கங்கை நீர் சுத்தமாக வருவதாகவும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளுமே முன்பு இருந்த அளவை விட அதிக அளவு சுத்தத்துடன் தற்போது இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
எனவே ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னர் கங்கை நீரை மேலும் தூய்மைப்படுத்த 7000 கோடி செலவழிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு தொழிற்சாலைகளின் கழிவு நீர் கங்கை நீரில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தாலே போதும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்