ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் சுதாகர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாகபட்டிணம் மாவட்டம் நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுதாகர், தாம் பணிபுரிந்த மருத்துவமனையில் போதுமான முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவர் சுதாகர் காயமான நிலையில், நேற்று மாலை நரசிபட்டிணம் தேசிய நெடுஞ்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் கிடந்துள்ளார்.
பின்னர்,போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.அங்கு மருத்துவர் அடிக்கடி மனரீதியாக பாதிக்கப்பட்டவராக நடந்து கொண்டுள்ளார்.
இதை
யடுத்து, அவரை கிங் ஜார்ஜ் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் சுதாகர் மது அருந்தியிருப்பதை கண்டுபிடித்து மேலும் பரிசோதனை செய்து வருகின்றனர்.