ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் வசிப்பவர் 25 வயது இளைஞர். இவரை சமீபத்தில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அதன்பிறகுதான் அந்த நபரைப் பற்றிய பல விசயங்கள் மூட்டை மூட்டையாக அவிழ ஆரம்பித்தன.
சமீபத்தில் விசாகபட்டினத்தில் உள்ள சத்யா நகரில் வசிக்கும் இளைஞர் சந்தீப் மீது, அவரால் பாதிக்கபட்ட ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
சந்தீப் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பணக்கார பெண்களைத் தேடி அவர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி, பின்னர் நெருக்கமாக பழகி அதன் மூலம் அவர்களிடம் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தவர்.
அதாவது, மேற்கூறிய பெண்ணுக்கு அலைபேசியில் அழைத்து, நான் மென்பொறியாளர் பேசுகிறேன். உங்கள் புகைப்படங்கள் ஆபாசமாக வந்துள்ளது. அதை அழிப்பதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று 40 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என் பல தவணைகளில் கேட்டு வாங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் அப்பெண்ணுக்கு பந்தேகம் வரவே பணம் தர் மறுத்தார். பின்னர் அப்பெண்ணின் புகைப்படங்கள் ஆபாசமாக பகிரப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பாதிக்கப்பட்ட்இதுகுறித்து போலீஸாரிடம் அப்பெண் புகார் கூறினார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சந்தீபை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் இதுபோல் 300 ற்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியுள்ளதாவும் தெரியவந்துள்ளது.
மேலும் சந்தீபிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பெண்கள் தங்கள் சொந்த விசயங்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.