Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒலிம்பிக்: பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

ஒலிம்பிக்: பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

ஒலிம்பிக்: பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?
, திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (11:06 IST)
பிரேசில் நாடின் ரியோ நகரில் நடைபெற்ற 2016 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி முடிவடைந்த நிலையில் அதில், பங்கேற்ற நாடுகளின் பதக்கத்தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.


 
அந்த பட்டியலில்,

* அமெரிக்கா 121 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. அதில், 46 தங்க பதக்கம், 37 வெள்ளி பதக்கம், 38 வெண்கல பதக்கம் அடங்கும்.

* பிரிட்டன் 67 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 27 தங்கம் பதக்கம்,  23 வெள்ளி பதக்கம்,  17 வெண்கல பதக்கம் அடங்கும்.

* சீனா 70 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 26 தங்கம் பதக்கம்,  18 வெள்ளி பதக்கம், 26 வெண்கல பதக்கம் அடங்கும்.

* ரஷ்யா 56 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 19 தங்கம் பதக்கம், 18 வெள்ளி பதக்கம், 19 வெண்கல பதக்கம் அடங்கும்.

* ஜெர்மனி 42 பதக்கங்களுடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், 17 தங்கம் பதக்கம், 10 வெள்ளி பதக்கம், 15 வெண்கல பதக்கம் அடங்கும்.

* இதைத்தொடர்ந்து ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா, இத்தாலி, ஆஸ்திரேலியா அடுத்தடுத்து பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

* இந்தியா 2 பதக்கங்களுடன் 67-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதில், பேட்மிண்டனில் பிவி சிந்து வென்ற 1 வெள்ளி பதக்கமும், மல்யுத்தத்தில் சாக்‌ஷி மாலிக் வென்ற 1 வெண்கல பதக்கம் அடங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போக்குவரத்து போலீசாரின் ஜீப்பை ஓட்டிச் சென்ற போதை ஆசாமி : சென்னையில் கலாட்டா