இந்தியா தான் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் முன்னோடி என விசா நிறுவனத்தின் துணைத் தலைவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தொலைநோக்கு திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பரவி வருகிறது என்பதும் பேரு நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை தற்போது டிஜிட்டலில் பண பரிவர்த்தனை முறை நடைபெற்று வருவது என்பது தெரிந்தது.
பெட்டிக்கடை முதல் தள்ளு வண்டியில் விற்பனை செய்யும் வியாபாரிகள் கூட டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்து வருவதை பார்த்து உலக நாடுகளை ஆச்சரியத்தில் உள்ளன. இந்த நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து விசா நிறுவனத்தின் துணைத்தலைவர் கெல்லி மஹோன் துல்லியர், என்பவர் கூறிய போது உலக அளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இந்தியா தான் இதில் முன்னோடியாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ள நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது என்பதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையும் உள்ளது.
இந்தியாவில் தற்போது 55 சதவீத பெண்கள் வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர் என்றும் அவர்களில் 20 சதவீத பெண்கள் சிறு மற்றும் குறிதொழில் செய்து வருகின்றனர் என்றும் கெல்லி மஹோன் துல்லியர் தெரிவித்தார்