Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலங்களில் கிடைத்த வைர கற்கள்! – போட்டி போட்டு நிலத்தை உழும் விவசாயிகள்!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (12:17 IST)
ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் நிலத்தை உழவு செய்த விவசாயிகளுக்கு வைர கற்கள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கிலியை சேர்ந்த விவசாயி ஒருவர் சில நாட்கள் முன்னதாக தனது நிலத்தை உழுது கொண்டிருந்துள்ளார். அப்போது அவரது நிலத்தில் ஒரு கல் மின்னி பிரகாசித்துள்ளது. அதை எடுத்து சென்று நகை வியாபாரி ஒருவரிடம் விசாரித்தபோது அது வைரக்கல் என்றும், ரூ.2 லட்சம் பெருமானம் பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அந்த கிராம மக்களிடம் தீயாக பரவியுள்ளது. இதனால் மேலும் சில விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது பார்த்தபோது அவர்களுக்கும் சில வைர கற்கள் கிடைத்துள்ளன. இதனால் கிராமமே சுற்றியுள்ள நிலப்பகுதிகளை போட்டி போட்டு உழுது வைரத்தை தேடி வருகிறார்களாம். இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments