ஆந்திராவில் கடந்த ஏப்ரல் மாதம் 10 வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்தப் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், 70.20 % மாணவியகளும், 64.02 % மாணவர்களும் வெற்றி பெற்றனர். சுமார் 4 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ஆனால் 2 லட்சம் மாணவிகள் தோல்வி அடைந்தனர்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகளில் மனம் உடைந்த 34 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.