Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு: கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய தேவ கெளடா!

Advertiesment
தீவிர அரசியலில் இருந்து ஓய்வு: கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய தேவ கெளடா!
, திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (16:12 IST)
கர்நாடகவில் உள்ள முக்கிய கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கெளடா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணியோடு ஆட்சி அமைத்து வருகிறது. தேவ கெளடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், தேவ கெளடா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
கடந்த 1953 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை துவங்கினார் தேவ கெளடா. அதன் பிறகு ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறார்.
 
1996 ஆம் ஆண்டில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்தார். அதேபோல் கர்நாடக முதல்வராக 1994-1996 வரை இருந்துள்ளார்.ம்தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவ கெளடா அறிவித்ததோடு, 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் அழகிரி புயல்: அதிமுக எம்.எல்.ஏ வைகைச்செல்வன்