Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறார் சம்மதத்துடன் உறவு கொண்டால் அது குற்றமில்லை: டெல்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Advertiesment
Delhi Court
, திங்கள், 14 நவம்பர் 2022 (16:57 IST)
18 வயதுக்கு குறைவானவர்களின் சம்மதத்துடன் உறவு கொண்டால் அது குற்றமில்லை என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியை சேர்ந்த 17 வயது சிறுமியை இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டது குறித்து சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் 
 
இதனை அடுத்து 17 வயது சிறுமியை மணந்ததாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டமும் பாய்ந்தது.  இதுகுறித்து இளைஞர் டெல்லி ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை அழைத்து விசாரித்தபோது தன்னுடைய சம்மதத்தின் பேரில் தான் அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும் தன்னுடைய சமூகத்தின் பெயர் நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்றும் கூறியுள்ளார்
 
இதனை அடுத்து மைனர் பெண் உடலுறவுக்கு  சம்மதம் தெரிவிப்பது சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படாது என்றாலும் சிறுமியின் சம்மதத்துடன் உறவு நடந்தது என்பதால் குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைக்க வைப்பது விபரீதமான நீதியாகிவிடும் என்று டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது
 
ஒருமித்த உணர்வுடன் உடலுறவு கொள்ளும்போது அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்றும் இருதரப்பு சம்மதத்துடன் நடக்கும் உடலுறவை குற்றம் ஆக்குவதற்கு போக்சோ சட்டம் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டார். இதனை அடுத்து சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டாய மதமாற்றம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்; சுப்ரீம் கோர்ட்