Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2-ஜி மேல்முறையீடு வழக்கு; டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (08:14 IST)
2ஜி அலைக்கற்றை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.ராசா  மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல்முறையீடு செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
நாடெங்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் ஆர்.ராசா, கனிமொழி உட்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. இது திமுகவினருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
 
அந்நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோரின் தரப்பின் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்த நிலையில் நேற்று சிபிஐ யும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மேல் முறையீடு செய்தது. 
 
இதனையடுத்து இந்த மனுவின் மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments