Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2024ல் பிரதமர் மோடிக்கு மக்களே லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள்: டெல்லி துணை முதல்வர்

Advertiesment
manish
, ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (14:03 IST)
2024 ஆம் ஆண்டில் மக்களே பிரதமர் மோடிக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுப்பார்கள் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் தற்போது சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சோதனையில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 13 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்த வழக்கில் தான் இந்த சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் மணிஷ் சிசோடியா 2024 ஆம் ஆண்டு பொதுமக்கள் மோடி உள்பட பாஜகவினருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்புவார்கள் என தெரிவித்துள்ளார்
 
 விலைவாசி ஏற்றம் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு  தீர்வுகாணும் நல்ல தலைவரை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் வகுப்பில் வளர்ப்பு பூனை தோன்றியதால் பணி நீக்கம்: ஆசிரியருக்கு ரூ4.8 லட்சம் இழப்பீடு