Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உப்பு லாரியில் ரூ.2700 கோடி மதிப்புள்ள ஹெராயின்: எங்கே இருந்து வந்தது தெரியுமா?

உப்பு லாரியில் ரூ.2700 கோடி மதிப்புள்ள ஹெராயின்: எங்கே இருந்து வந்தது தெரியுமா?
, ஞாயிறு, 30 ஜூன் 2019 (22:00 IST)
பஞ்சாப் மாநில சுங்கத்துறை அதிகாரிகள் தற்செயலாக ஒரு லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் ரூ.2700 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த உப்பு லாரி பாகிஸ்தானில் இருந்து வந்ததே அதிர்ச்சிக்கான இன்னொரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள் மட்டுமின்றி போதைப்பொருட்களும் கடத்தப்பட்டு வருவது குறித்த தகவல்கள் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாக பாகிஸ்தானில் இருந்து வந்த உப்பு லாரியில் இருந்து ஹெராயின் கடத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
நேற்று இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி-வாகா என்ற பகுதியில் உப்பு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை சந்தேகம் அடைந்து பஞ்சாப் சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது அதில் இருந்து உப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை அந்த் உப்பை எடுத்து சோதனை செய்ததில் அவை உப்பு இல்லை என்றும் அனைத்துமே உப்பு போல் இருந்த ஹெராயின்கள் என்பது தெரியவந்தது. 
 
இதனையடுத்து ஹெராயின் மூட்டைகளை கைப்பற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் லாரியில் இருந்த ஹெராயின்கள் 532 கிலோ என்றும், அதன் மதிப்பு ரூ 2700 கோடி என்றும் கண்டுபிடித்தனர். இந்த ஹெராயினை அமிர்தசரஸில் உள்ள வியாபாரி ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாகவும், அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டு பேர் தேர்வு: திடமான மனநிலை தேவை என விளம்பரம்