நேரு பல்கலைக்கு விவேகானந்தர் பெயர்: பாஜக பிரபலம் கோரிக்கை!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (18:11 IST)
நேரு பல்கலைக்கு விவேகானந்தர் பெயர்: பாஜக பிரபலம் கோரிக்கை!
டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பெயரை சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகம் என மாற்ற வேண்டும் என பாஜக பிரமுகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பல ஆண்டுகளாக டெல்லியில் ஜே.என்.யூ பல்கலைக்கழகம் என அதாவது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்ற பெயருடன் இயங்கிவரும் பல்கலைக்கழகத்தை திடீரென சுவாமி விவேகானந்தர் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என பாஜக பிரமுகர் சிடி ரவி என்பவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் ஆன்மீக தலைவர்களில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் பெயரை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக இந்த பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரை வைக்க வேண்டும் என்று சிடி ரவி கோரிக்கை விடுத்துள்ளார் 
 
சிடி ரவியின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா என்பதையும் அதற்கு ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அனுமதிப்பார்களா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments