Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீ டு’ இயக்கத்தை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது : நீதிமன்றம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (13:54 IST)
பாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் விகாஸ் பஹல். இவர் மீது  பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்த்த பெண் பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். 

 
குயின் இந்திப் பட ஷூட்டிங்கின்போது தனக்கு விகாஸ் பஹல் பாலியல் தொந்தரவு கொடுத்தாக அந்த பெண் புகார் தெரிவித்திருந்தார். இதற்கு குயின் பட நடிகை கங்கனா ரணவத்தும் ஆதரித்து, அந்தப் பெண்ணுக்குத் துணை நின்றார்.
 
இந்த நிலையில் விகாஸ் பஹல் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி  மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், படத் தயாரிப்பு நிறுவனமான பாண்டம் பிலிம்ஸ், திரைப்பட இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், விக்கிரமாதித்யா மோத்வானே ஆகியோர் தனக்கு ரூ.10 கோடியை நஷ்டஈடாகத் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த  மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, "பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் தருவதற்காக ‘மீ டு’ இயக்கம் உள்ளது. ‘மீ டு’ இயக்கத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது, தொடர்ந்து இந்த வழக்கை நடத்த அந்த பெண் விரும்ப வில்லையென்றால் வேறு யாரும் இதைப்பற்றி பேசமாட்டார்கள். அந்த பெண்ணுக்குப் பதிலாக வேறு யாரும் வழக்கு தொடர முடியாது. அவரது சார்பில் யாரும் இந்த வழக்கை நடத்தக்கூடாது.
 
விகாஸ் பஹல் சார்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவற்றை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ளமுடியுமா என்பதை பரிசீலிக்கலாம்" என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்