Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் 'மீ டு' எப்படி வரும்: பிரேமலதா விஜயகாந்த்

Advertiesment
பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் 'மீ டு' எப்படி வரும்: பிரேமலதா விஜயகாந்த்
, ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (13:28 IST)
'மீ டு' இயக்கம் மூலம் இந்தியா முழுவதும் பல பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல ஆண்டுகாலமாக வெளியில் சொல்லாமல் இருந்த பெண்கள், 'மீ டு' இயக்கம் மூலம் தைரியமாக தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 
#MeToo ஹேஸ்டாக் மூலம் நடிகை தனுஸ்ரீ தத்தா, கங்கனா ரணாவத், சின்மயி, லீனா மணிமேகலை, சுருதி ஹரிகரன் உள்பட பலர் பாலியல் புகார் எழுப்பிவருகிறார்கள். இதற்கு ஆதரவும் எதிர்ப்பு இருக்கிறது. இந்த விவகாரத்தில் நானே படேகர், அர்ஜுன், வைரமுத்து உள்பட பல பெரும் தலைகள் சிக்கியுள்ளனர்.
 
சிலர் 'மீ டு' இயக்கம் மூலம் ஆதாரம் இல்லாமல் அவதூறாக குற்றம்சாட்டுவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், தேமுதிக பொருளாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பிரேமலதா விஜயகாந்த், ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையும். எனவே, ஒவ்வொரு பெண்ணும் நெருப்புபோல் இருந்தால் #MeToo எப்படி வரும்? என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூடநம்பிக்கை...9 வயது சிறுவன் நரபலி: ஒடிசாவில் கொடூரம்