Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியின் 100 நாள் ஆட்சி: கொண்டாட்டம் ஒருபுறம், குழப்பம் ஒருபுறம்

மோடியின் 100 நாள் ஆட்சி: கொண்டாட்டம் ஒருபுறம், குழப்பம் ஒருபுறம்
, ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (19:12 IST)
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று 100 நாட்கள் ஆனதை அடுத்து ஒருபுறம் பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு இதுவொரு குழப்பமான ஆட்சி என விமர்சனம் செய்துள்ளது
 
 
இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் மேலும் கூறியதாவது: மோடி அரசின் 100 நாளில் இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவையும், கும்பல் தாக்குதல் அதிகரிப்பையும் , அரசியல் பேரங்களையும் சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதக்கள் தன்னிச்சையாக நிறைவேற்றப்பட்டது நாட்டின் 8 முக்கிய துறைகளிள் வளர்ச்சி விகிதம் 2 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனால் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியில் உள்ளதை நிதியமைச்சர் ஏற்க மறுக்கிறார். பாஜக அரசு அலட்சியமான மற்றும் வஞ்சமான பாதையை தொடர்வதால் நாம் மந்தநிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளது. 
 
 
மேலும் மோடியின் 100 நாள் ஆட்சியில் கொடுங்கோன்மை, குழப்பம் மற்றும் அராஜகம் ஆகியவையே அதிகம் இருந்ததாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆனால் மத்திய அமைச்சர்கள் மோடி தலைமையிலான அரசு மிகச்சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைவாசிகளுக்கு கிராம சந்தை அனுபவம் தரும் இயற்கை விவசாய பெண்கள்