Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமர் மோடி நடிக்கிறார் ... பாஜக., ஆட்சி தோல்விகரமான ஆட்சி - கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு.

பிரதமர் மோடி நடிக்கிறார் ... பாஜக.,  ஆட்சி தோல்விகரமான ஆட்சி - கே.எஸ்  அழகிரி குற்றச்சாட்டு.
, ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (18:23 IST)
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 354 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையில், இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைந்துள்ளது. எனவே பாஜக இரண்டாம் முறையாகப் பதவியேற்று ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆனதையொட்டி, பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தோல்விகரமான ஆட்சி நடத்திவருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நம் நாடு என்றுமே இல்லாத வகையில், கடும் பொருளாதார மந்தத்தில் சிக்கியுள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன்சிங் சமீபத்தில் தற்போதைய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு, கோட்டு போட்டு மழையில் நனைபவர் என பாஜக,  அவரை விமர்சித்ததாகத் தகவல் வெளியானது.
 
இதையடுத்து,பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனாவும், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநருமான மன்மோகன்சிங்கின் அறிவுறையை கேட்டுக்கொள்ளுவது நல்லது என அறிவுறுத்தினார். 
 
இதற்கிடையே பொருளாதார மந்தத்தையும், மோட்டார் வானத்துறையில் ஏற்பட்டுள்ள நுகர்வுகுறைவு மற்றும் வேலைவாய்ப்பை சரிசெய்யவும், நாட்டில் முக்கியமாக பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் லேசாக பங்குச் சந்தைகளும் , பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் மீண்டுவருகின்றன. 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்., கே.எஸ். அழகிரி கூறியதாவது :
எனக்கு யாரும் கட்சிக்குள்ளிருந்து அழுத்தம் தரவில்லை. கடவுள் கூட எனக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. மக்களுக்காக பணி செய்வது போன்று பிரதமர் மோடி நடித்துவருகிறார். பாஜக ஆட்சி தோல்விகரமான ஆட்சி என தெரிவித்தார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமியை 7- வது மாடியில் இருந்து தூக்கி வீசிய கொடூரன்...