Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பதவியை நீயே வெச்சுக்கோப்பா! – முதல்வர் ஆகிறாரா சச்சின் பைலட்?

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (11:28 IST)
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க சமாதான முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார். இந்த சிக்கலை பயன்படுத்தி சச்சின் பைலட்டை பாஜகவின் பக்கம் ஈர்க்கவும் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. ராகுல் காந்தி சச்சினுக்கு போன் மூலமாக பேசியுள்ளார்.

ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் சச்சின் பைலட்டை முதல்வராக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ராஜஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments