கட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் - கபில் சிபல்!

ஞாயிறு, 12 ஜூலை 2020 (15:24 IST)
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில் கட்சியை நினைத்து வருத்தப்படுகிறேன் என பதிவிட்டுள்ளார். 
 
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடத்து வருகிறது. ஆனால் இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்திருந்தார். பாஜகவினர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிகளில் உள்ளனர் என வெளிப்படையாக தெரிவித்தார். 
 
இந்நிலையில் இந்த பிரச்சனை இப்போது வரை நீடிக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில், நமது கட்சியை நினைத்து கவலைப்படுகிறேன். குதிரைகள் அனைத்தும் வெளியேறிய பிறகு தான் நாம் கவலைப்படுவோமா என பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஒரு வழியாக மாஸ்க் அணிந்த ட்ரம்ப்!!