Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்தியா? பிரியங்கா சோப்ராவா? – கன்ஃப்யூஸ் ஆன காங்கிரஸார்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:29 IST)
டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பிரியங்கா காந்திக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சி குறித்து பல விஷயங்களை பேசிய சுரேந்தர், பேசி முடிக்கும்போது காங்கிரஸ் தலைவர்கள் நீடூடி வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் ‘ஜிந்தாபாத்’ என்று முழங்கினார். அப்போது சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்களை சொன்ன சுரேந்தர் கடைசியாக பிரியங்கா காந்தி என்று கூறுவதற்கு பதிலாக பிரியங்கா சோப்ரா என முழங்கினார்.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுபாஷ் சோப்ரா அவருக்கு சைகை காட்ட தவறை உணர்ந்த சுரேந்தர் மேடையிலேயே மன்னிப்பு கேட்டு கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்கா சோப்ரா வாழ்க என கூறிய அந்த வீடியோ இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments