Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க தைரியமாக எங்களை விமர்சிக்கலாம்! – அனுமதி கொடுத்த அமித்ஷா!

Advertiesment
நீங்க தைரியமாக எங்களை விமர்சிக்கலாம்! – அனுமதி கொடுத்த அமித்ஷா!
, ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (16:22 IST)
மோடி அரசை விமர்சிக்க பயமாக உள்ளது என பஜாஜ் நிறுவனர் பேசியதற்கு பதிலளித்துள்ளார் அமித்ஷா!

எக்கனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய ஒருங்கிணைந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. பல தொழிலதிபர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய பஜாஜ் நிறுவன தலைவர் ராகுல் பஜாஜ் “முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின்போது யாரை வேண்டுமானாலும் விமர்சிக்க முடிந்தது. ஆனால் தற்போது அதுபோல விமர்சித்தால் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்களோ என்று பயமாக உள்ளது” என்று கூறினார்.

இதை அமித்ஷா மேடையில் இருக்கும்போதே ராகுல் பஜாஜ் பேசியது பலருக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராகுல் பஜாஜ் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அமித்ஷா, யாரும் பயப்பட தேவையில்லை என்றும், தற்போது தங்கள் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களே அதிகம் வந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். மேலும் எங்களை விமர்சிப்பதற்கு அச்சமான சூழல் இருந்தால் அதை மாற்ற வேண்டியது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!? – கட்சிகள் மும்முரம்!