மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தை சேர்ந்தவர் துருபதாபாய். இவருக்கு திருமணமாகி 2 வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமான இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக மற்றொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இரண்டு குழந்தைகளையும் துருபதாபாய் தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துருபதாபாயை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இரண்டு குழந்தைகளும் விடாமல் அழுது கொண்டே இருந்ததாகவும், குழந்தைகளின் அழுகை எரிச்சலை ஏற்படுத்தியதால் தீ வைத்து கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த கொடூர கொலைக்கு அந்த பெண்ணின் தாயும், சகோதரனும் உடந்தையாக செயல்பட்டது தெரிய வந்த நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னஞ்சிறு குழந்தைகளை தாயே இரக்கமின்றி தீ வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.