Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரத்திற்கு பின்னர் முதன்முதலாக மின்சாரத்தை பார்த்த கிராமம்

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (19:41 IST)
இந்தியா கடந்த சில ஆண்டுகளில் டெக்னாலஜியில் வெகுவேகமாக முன்னேறி வருவதாக கூறப்படுகிறது. அனைத்து துறைகளிலும் விஞ்ஞானம் புகுந்து அமெரிக்கா உள்பட பல மேலைநாடுகளை வியக்க வைத்து வரும் இந்தியாவில், கிராமங்கள் மட்டும் இன்னும் பின்தங்கியே இருப்பது பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது என்பது வேதனையான விஷயம்

இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் தற்போதுதான் முதல்முதலாக மின்சாரத்தை பார்த்துள்ளது ஒரு இந்திய கிராமம். சட்டீஸ்கர் மாநிலத்தை செர்ந்த ஜோகபாத்தா என்ற கிராம மக்களுக்கு முதன்முதலாக இன்று முதல் மின்சாரம் கிடைத்துள்ளது.

சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன்சிங் அந்த கிராமத்தின் மின் இணைப்பை முதல்முதலாக தொடங்கி வைத்தார். இதை முதல்வர் பெருமையாக கூறிக்கொண்டாலும், சுதந்திரத்திற்கு பின்னும் 70 வருடங்களாக ஒரு கிராமத்திற்கு மின்சாரம் இல்லாமல் இருந்தது இந்தியாவின் ஒரு பெரும் குறையாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

பெங்களூரை அடுத்து குஜராத்திலும் பரவிய எச்.எம்.பி.வி. பாதிப்பு எண்ணிக்கை 3ஆக உயர்வு;

தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள்; பெண் வாக்காளர்கள் அதிகம்!

ஆளுநர் யாராக இருந்தாலும் தமிழக மரபைதான் கடைப்பிடிக்கணும்! - தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்!

கவர்னரின் செயல் கூட்டாட்சி மாண்பிற்கே விரோதமானது: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments