Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!

Advertiesment
இந்தியா, இந்தோனேசியாவிற்கு சுனாமி ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!
, சனி, 16 டிசம்பர் 2017 (18:12 IST)
சனிப்பெயர்ச்சி காரணமாக கடலுக்கு அடியில் உள்ள பூமி விலகுவதால் இந்தியா, ஜப்பான், மலேசியா போன்ற நாடுகளில் கடல் கொந்தளிக்கும் எனவும் சுனாமி வரும் எனவும், இந்தோனேசியாவில் அக்னி குழம்புகள் வெளிப்படும் எனவும் பண்டிதர் பச்சை ராஜென் கணித்துள்ளார்.
 
சனிப்பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழ உள்ளது. வரும் 19-ஆம் தேதி செவ்வாய் கிழமை விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சன பகவான் இடம் பெயர்கிறார். நீர் ராசியில் இருந்து நெருப்பு ராசியில் அமர்கிறார் சனீஸ்வரன்.
 
சனிப்பெயர்ச்சி அன்று சனீஸ்வரர் நின்ற கிரகம் கேது. கேது கிரகம் கடல் ராசியில் இருப்பதாலும், கேது நின்ற கிரகம் செவ்வாய் என்பதாலும் சனி, செவ்வாய், கேது கிரகங்களின் போராட்டங்களினால் கடலுக்கு அடியில் விலகுதல் ஏற்பட்டு கடல் கொந்தளிக்கும். இதனால் டிசம்பர் 15 முதல் 2018 பிப்ரவரி வரை இதன் தாக்கம் இருக்கும் என பண்டிதர் பச்சை ராஜென் எழுதிய புத்தகத்தில் கணித்துள்ளார்.
webdunia
 
இந்தோனேசியா, ஜப்பான், இந்தியா, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் அக்னிக்குழம்புகள் வெளிப்படும். எரிமலை தாக்கமும் பல நாடுகளில் இருந்து வரும். இருப்பினும் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என கணித்துள்ளார் அவர்.
webdunia
 
அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் இந்தோனேசியா நாடுகளில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டும். இதனால் உயிர் சேதம் ஏற்படும். 11 புயல்கள் உருவாகி 5 புயல்கள் வலுவிழந்தும் 6 புயல்களினால் நல்ல மழையும் ஏற்படும் என்று 2017-18-ஆம் ஆண்டு பஞ்சாங்கம் கணித்துள்ளது.
 
மேலும், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்தோனேசியா, ஈரான், ஈராக் நாடுகளில் பூமி வெடிப்பும், நில நடுக்கங்களும் ஏற்படும், கன்னியாகுமரி, திருச்செந்தூர், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றமும் ஏற்படும் என்றும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.கே.நகரில் தேர்தல் நிறுத்தமா? அதிகாரி பவித்ரா அதிர்ச்சி தகவல்