Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் டாடா ஏர் இந்தியாவை வாங்கவில்லை… மத்திய அரசு தறுப்பு!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:39 IST)
டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை வாங்கிவிட்டதாக வெளியான செய்தியை மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனியார் வசம் செல்ல இருப்பதை அடுத்து இந்த நிறுவனத்தை வாங்க ஏலம் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ஏலத்தொகையையும் டாடா குழுமம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை ஒன்றிய அமைச்சர்கள் குழு ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இதை மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை சந்திக்கும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ்.. யார் முதல்வர்?

நெல்லையை அடுத்து மதுரையில்.. அதிமுக ஆய்வுக்குழு கூட்டத்தில் அடிதடி..!

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments