ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை ஒன்றிய அமைச்சர்கள் குழு ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் தனியார் வசம் செல்ல இருப்பதை அடுத்து இந்த நிறுவனத்தை வாங்க ஏலம் எடுக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்க விருப்பம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி ஏலத்தொகையையும் டாடா குழுமம் சமர்ப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலைக்கு வாங்கும் ஏலத்தில் டாடா வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியாவை விலைக்கு வாங்கும் டாடாவின் ஏல திட்டத்தை ஒன்றிய அமைச்சர்கள் குழு ஏற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா டாடாவின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் டாடா நிறுவனம் 67 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றும். நீண்ட நாள் கனவான விமான நிறுவனம் டாட்டா வசம் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.