Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (14:40 IST)
இந்தியாவில் மிக வேகமாக கொரோனா தோற்று பரவி வருவதை அடுத்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மத்திய அரசு கோரிக்கை விடுத்து வந்தனர் 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை பரிசீலித்து நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து சிபிஎஸ்சி பொதுத்தேர்வை ரத்து செய்வதா அல்லது ஒத்திவைப்பதாக என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியுடனும் பிரதமர் மோடி சற்று முன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை அடுத்து மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை நடக்க இருந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
 
அதேபோல் மே 4ஆம் தேதி தொடங்க இருந்த 12-ஆம் வகுப்புத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகவும், இந்த தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments