Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்திற்கு முதல் நாள் எஸ்கேப் ஆன மணமகன்.. மணமகள் நடத்திய திடீர் தர்ணா..!

Advertiesment
திருமணத்திற்கு முதல் நாள் எஸ்கேப் ஆன மணமகன்.. மணமகள் நடத்திய திடீர் தர்ணா..!
, செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:23 IST)
திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் திடீரென எஸ்கேப் ஆகிவிட்டதை அடுத்து மணமகள் மணமகனின் வீட்டிற்கு சென்று தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற இளைஞரும்  திவ்யஸ்ரீ என்ற இளம் பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருதரப்பு பெற்றோர் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்த நிலையில் திடீரென திருமணத்திற்கு முந்தைய நாள் மகேஷ் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யஸ்ரீ நேராக மணமகனின் வீட்டிற்கு சென்று வாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் இடத்துக்கு சென்று  தலைமறைவாக இருக்கும் மகேசை கண்டுபிடித்து தருவதாக உறுதி அளித்தனர்.

இதனை அடுத்து திவ்யஸ்ரீ சமாதானமாகி தனது வீட்டுக்குள் சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானிலிருந்து பறந்து வந்த சீன ட்ரோன்! – சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!