Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தொற்று... திருமணமான 3 வது நாள் மணப்பெண் உயிரிழப்பு !

கொரோனா தொற்று... திருமணமான 3 வது  நாள் மணப்பெண் உயிரிழப்பு !
, வியாழன், 4 மார்ச் 2021 (21:52 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவைச் சேர்ந்தவர் ஹிமான்ஹூ. இவரது மனைவி முக்தா சோலங்கி. இவர்கள் இருவரும் காதலித்து  சம்மதத்தின் பேரில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில்,  திருமணம் முடிந்த 3 ஆம் நாளான இன்று புதுப்பெண் தனக்குக் கொரோனா தொற்று இருக்கிறதோ என்ற சந்தேகத்தில் உயிரிழந்ததாகத் தெரிகிறது..

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவைச் சேர்ந்தவர் ஹிமான்ஹூ. இவரது மனைவி முக்தா சோலங்கி. இவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் 1 ஆம் தேதி காதல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போதே முக்தா சோலங்கிக்கு அதிக காய்ச்சல்  இருந்ததாகத் தெரிகிறது. எனவே மணமகன் மற்றும் புதுப்பெண் இருவரும் முக்தாவின் வீட்டிலேயே தங்கினர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு காய்சல் எனக் கூறி மருந்து கொடுத்திருக்கிறார்.

இன்று ஹிமான்ஹூவின் வீட்டிற்குச் செல்லுவதற்காக இருவரும்  கிளம்பினர். அப்போது திடீரென்று உடல் நிலை சரியில்லாத முக்தா கீழே விழுந்ததாகத் தெரிகிறது. அவரைஅவரது  குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களால் அவரை காப்பாற்றமுடியவில்லை.

அப்போது அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. மணப்பெண் கொரொனா தனக்கு ஏற்பட்டுள்ளது என்ற பயத்திலேயே இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வாரத்திற்கு முன் கட்சியில் சேர்ந்தவர் முதல்வர் வேட்பாளரா?